கர்நாடகாவில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் லக்னோவில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேதசத்தைச் சேர்ந்த அனுரங் திவாரி (35) பெங்களூருவில் உணவு மற்றும் நுகர்வோர் துறை கமிஷ்னராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அனுரங் திவாரி உத்தரப் பிரதேசத்தில் லக்னோவின் மையப் பகுதியிலுள்ள மீராபாய் விடுதியில் உள்ள சாலை ஓரத்தில் இன்று (புதன்கிழமை) மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஏ.கே.சாகி கூறும்போது, "விடுதியின் சாலையின் ஓரத்தில் அனுரங் திவாரி இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்த பாதசாரிகள் போலீஸருக்கு தகவல் அளித்தனர். இறந்து கிடந்தது அனுரங் திவாரிதான் என்பது அவரது அடையாள அட்டை மூலம் உறுதி செய்யப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் அவரது கன்னத்தில் காயம் உள்ளது கண்டறியப்பட்டது, மற்றபடி உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதும் இல்லை. அனுரங் திவாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago