புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்துள்ள பதில் வருமாறு: கடந்த 2022-ம் ஆண்டில் உள்நாட்டு சேவை விமானங்களில் 546 தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்பட்டன. இதில் இண்டியாகோ 215, ஸ்பைஸ்ஜெட் 143, விஸ்தாரா 97, ஏர் இண்டியா 64, கோ பர்ஸ்ட் 7, ஆகாசா ஏர் 6 என தொழில்நுட்ப குறைபாடுகளை எதிர்கொண்டன.
கடந்த 2 ஆண்டுகளில் உள்நாட்டு சேவை விமானங்களில் மொத்தம் 1,090 தொழில்நுட்ப குறை பாடுகள் ஏற்பட்டன. கடந்த 2021-ல் 544 தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்பட்ட நிலையில், 2022-ல் இவை சற்று அதிகரித்துள்ளன. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
குறைந்த கட்டண விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் அதிகம் ஏற்படுகின்றனவா என்ற கேள்விக்கு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே. சிங் மறுப்பு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago