நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, “சிறைகளில் இருக்கும் ஏழைக் கைதிகளால் அபராதம் அல்லது ஜாமீன் தொகையை செலுத்த முடியாத நிலை உள்ளது.
இவர்களுக்கு உதவிடும் வகையில் தேவையான நிதியுதவியை அரசு அளிக்கும்” என்றார். கடந்த நவம்பர் 26-ல் அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் அங்கு வாடும் ஏழைக் கைதிகளுக்கு உதவிடவும் பரிந்துரை செய்தார். சிறைகளில் உள்ள ஏழைகளின் அவல நிலையை எடுத்துரைத்த அவர், மேலும் பல சிறைகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார். அவரது உரைக்கு சில நாட்களுக்குப் பிறகு இத்தகைய கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய திட்டத்தை வகுக்குமாமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இத்தகைய கைதிகளின்விவரங்களை 15 நாட்களுக்குள் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும் ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் சுமார் 5,000 விசாரணைக் கைதிகள் சிறையில் வாடுவதாக சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்தது
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago