மத்திய பட்ஜெட் | உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான முதலீட்டு செலவினம் ரூ.10 லட்சம் கோடியாக 33 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது:

2023-24-ம் நிதியாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக முதலீட்டு செலவினம் ரூ.10 லட்சம் கோடியாக 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் ஆகும்.

புதிதாக நிறுவப்பட்டுள்ள உள்கட்டமைப்பு நிதிச் செயலகம் அதிக தனியார் முதலீட்டை ஈர்க்க உதவும்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்பு வகைப்பாடு மற்றும் நிதியுதவி கட்டமைப்பை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்படும்.

இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE