கல்வி, சுகாதாரத்துக்கு நிதி குறைத்தது தீங்கு - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புகார்

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: பட்ஜெட்டில் கல்விக்கான நிதி 2.64 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது துரதிருஷ்டம். சுகாதாரத்துக்கான நிதி 2.2 சதவீதத்திலிருந்து 1.98 சதவீதமாக குறைத்தது தீங்கு விளைவிக்கும்.

கடந்தாண்டு டெல்லி மக்கள் வருமான வரியாக ரூ.1.75 லட்சம் கோடி செலுத்தினர். இதில் டெல்லி மேம்பாட்டுக்கு ரூ.325 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் டெல்லி கவனிக்கப்படுகிறது. இது நியாயமற்றது.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE