அனைத்து மாநிலத்துக்கான பட்ஜெட்டாக இல்லை - கவிதா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மேலவை உறுப்பினரும் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா நேற்று கூறியதாவது:

விரைவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக இது உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக இது இல்லை.

ரூ. 10 லட்சம் வருமானம் வரை வரி இருக்காது எனஎதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒருவிதமாகவும் மற்ற மாநிலங்களுக்கு வேறு விதமாகவும் பட்ஜெட் உள்ளது.

மக்களின் அடிப்படை வசதிகளான கல்வி, வீட்டு வசதி, மருத்துவத்திற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. எங்கள் தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு சுமார் ஆயிரம் கோடி வரை வழங்க வேண்டியுள்ளது. அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE