பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை - குஜராத் மாநில காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: பாலியல் வன்கொடுமை வழக்கில், சாமியார் அசராம் பாபுவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1941-ம் ஆண்டு பிறந்தவர் அசுமல் சிறுமலானி ஹர்பலானி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இவரது குடும்பம் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தது. சிறு வயதில் அசுமல் சைக்கிள் பழுது பார்ப்பது, டீ விற்பது, சாராயம் விற்பது என பல தொழில் களை செய்துள்ளார்.

தனது 15-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளூர் ஆசிரமம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்த சாமியார் இவரை சீடராக ஏற்று அவருக்கு அசராம் என பெயர் சூட்டினார்.

அதன்பின் இந்தியாவிலும், வெளிநாடுகளில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களையும், 40 பள்ளிகளையும் தொடங்கினார்.

இவர் மீது ஆக்கிரமிப்பு, பாலியல் வன்கொடுமை உட்பட பல வழக்குகள் உள்ளன. ராஜஸ்தானில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இவருக்கு ஏற்கெனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஜோத்பூர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ஆசிரமத்தில் தங்கியிருந்த சூரத் நகரைச் சேர்ந்த பெண் சீடர் ஒருவர், அசராம் பாபு மீது 2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். கடந்த 2001 முதல் 2006 வரை அந்தப் பெண் சீடர் அசராம் பாபு ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். அப்போது அசராம் பாபு, தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என பெண் சீடர் புகார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் சீடரின் தங்கையை, அசராம் பாபுவின் மகன் நாராயண் சாய், ஆசிரமத்தில் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் நாராயண் சாய்க்கு கடந்த 2019-ம்ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அசராம் பாபு மீதான வழக்கு காந்திநகர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அசராம் பாபு குற்றவாளி என நீதிபதி டி.கே.சோனி கூறினார்.

இவரது குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அசராம்பாபுவின் மனைவி, மகள் உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். அசராம் பாபுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. அசராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி டி.கே.சோனி நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அசராம்பாபுவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்