பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசையின் உரை - நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு பதில்

By என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை 2023-24 வருவாய் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

அதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திடாததால் மாநில அரசு, உயர்நீதி மன்றத்தில் நேற்று அவசர மனுவை தாக்கல் செய்தது. ஆனால், மனுவை ஏற்பதற்கு முன், இருதரப்பு வழக்கறிஞர்களும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துமாறு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆளுநர் அனுமதி வழங்கினால், முறைப்படி முதலில் ஆளுநர் உரை, அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் போன்றவை கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.

அதன்பின்னர் பட்ஜெட் கூட்டம் நடத்த ஆளுநர் தரப்பில் அனுமதி தர ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்