கரோனா தடுப்பூசி | நாடு முழுவதும் 220.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.17 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 1,842 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.01 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதம்.கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,50,057 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் 109 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.07 சதவீதமாகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 91.53 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,48,464 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்