இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன: பிரதமர் நரேந்திர மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - ஜனநாயகத்தின் தாய் என்ற புத்தகம் குறித்து குறிப்பிட்டார். அதில், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்த அவர், மிகச் சிறந்த கட்டுரைகளை அந்த புத்தகம் கொண்டிருப்பதாகக் கூறினார்.

நமது நரம்புகளில், நமது கலாச்சாரத்தில், நாம் மேற்கொள்ளும் பணிகளில் ஜனநாயகம் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய சமூகம் இயற்கையாகவே ஜனநாயக சமூகம் என குறிப்பிட்டார். புத்தமத துறவிகளின் சங்கத்தோடு இந்திய நாடாளுமன்றத்தை அம்பேத்கர் ஒப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மிகச் சிறிய ஆனால் புகழ்பெற்ற கிராமமான உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டில் கிராம சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இது 1100-1200 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கல்வெட்டு என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, உலகையே ஆச்சரியப்படுத்தக்கூடியது இது என தெரிவித்துள்ளார். இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியல் சாசனம் என்றும் பிரதமர் மோடி வர்ணித்துள்ளார்.

இதேபோல், 12ம் நூற்றாண்டில் கர்நாடகாவில் கட்டப்பட்ட பசவேஸ்வரா ஆலயத்தில் அனுபவ மண்டபம் என ஒரு மண்டபம் உள்ளதையும், எவர் ஒருவரும் தனது அனுபவத்தை எவ்வித தயக்கமும் இன்றி கூறுவதற்காக இது கட்டப்பட்டது என்பதையும் தெரிவித்த நரேந்திர மோடி, இந்த மண்டபத்தில் ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

சிறுதானியங்களின் பயன்பாடு நாட்டில் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது என தெரிவித்த பிரதமர் மோடி, சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகள் இதனால் மிகப் பெரிய உற்சாகமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றில் காஷ்மீரை குறிப்பிட்டு எழுதிய ஒருவர், இந்த சொர்க்கத்தைவிட வேறு எது அழகாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர் கூறியது உண்மைதான் என்றும் அதனால்தான் காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என வர்ணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்