திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று பிபிசி ஆவண படத்தை திரையிட்டது.
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, 2 பாகங்களாக ஆவண படத்தை வெளியிட்டிருக்கிறது. “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிபிசியின் ஆவண படத்தை சமூக வலைதளங்கள், பொது இடங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த சூழலில் காங்கிரஸ் சார்பில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிபிசி ஆவண படம் நேற்று மாலை பொது அரங்கில் திரையிடப்பட்டது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகிப்பதால், ஆவண படம் திரையிடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அண்மையில் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி மீதுவிமர்சனங்கள் இருந்தாலும் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பிபிசி தலையிடக்கூடாது" என்று பகிரங்கமாக எதிர்ப்பை பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து கட்சியின் அனைத்து பதவிகளையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
» டெல்லி மேயர் தேர்தலுக்கு காலக்கெடு - உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கோரிக்கை
» ராகுல் நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய ஜனதா தளம் மறுப்பு
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago