பிபிசி ஆவணப்படத்தை எதிர்த்ததால் காங்கிரஸார் கடும் விமர்சனம் - ஏ.கே.அந்தோணி மகன் அனில் விலகல்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பிபிசி நிறுவனம் ஒரு ஆவண படத்தை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்தியஅமைச்சர் ஏ.கே. அந்தோணி மகன்அனில் அந்தோணி, நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவண படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, காங்கிரஸ், பாஜக இடையே, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிரதமர் மோடி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் உள்நாட்டு விவகாரங்களில் பிபிசி தலையிடக் கூடாது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

கட்சியினர் கண்டனம்: இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனில் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் அழுத்தம் கொடுத்தனர். இதை ஏற்க மறுத்தார். அதன் பிறகும் அவருக்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அனில் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார். அத்துடன், கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள தனது விரிவான பதவி விலகல் கடிதத்தை இணைத்துள்ளார்.

அனில் அந்தோணி மற்றொறு ட்விட்டர் பதிவில், “பிபிசி ஆவணப் படம் குறித்து நடுநிலையான கருத்தை வெளியிட்டேன். ஆனால் அதை கட்சியினர் தவறாக புரிந்து கொண்டனர். கருத்து சுதந்திரம் பற்றி பேசக்கூடியவர்கள், எனதுகருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். நான் மறுத்துவிட்டேன்.

இதையடுத்து எனது முகநூல்பக்கத்தில் கண்டன கருத்துகளை பதிவிட்டனர். இது என் மனதைக்காயப்படுத்தியதால், கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகினேன். ஆனால் கட்சியில் இருந்து விலகவில்லை” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்