புதுடெல்லி: டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டலில் முகமது ஷெரீப் என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அவர், தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாகவும் அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் ஃபலா பின் சயத் அல் நஹ்யானின் அலுவலக ஊழியர் என்றும் கூறியுள்ளார். சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய அவர் கடந்த நவம்பர் 20-ம் தேதி, தகவல் தெரிவிக்காமல் ஓட்டலை விட்டு வெளியேறிவிட்டார்.
அவர் ரூ.35 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ரூ.11.5 லட்சம் மட்டுமே செலுத்தியுள்ளார். ரூ.23 லட்சத்தை செலுத்தவில்லை. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் டெல்லி போலீஸில் புகார் அளித்தனர். அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஓட்டல் மேலாளர் அனுபம் தாஸ் குப்தா அளித்தப் புகாரின் அடிப்படையில் மோசடி நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் முகமது ஷாரிஃப் என்ற அந்த நபர் கர்நாடகா மாநிலம் தக்ஷின் கன்னடாவைச் சேர்ந்தவர். அவரை கைது செய்த போலீஸார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 419/420/380 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago