இலங்கை பிரதமர் ரணில் விக்ர மசிங்கே ஏழுமலையானைத் தரிசிக்க இன்று திருப்பதி வருகிறார். இதனால், திருப்பதி, திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேருடன் இன்று திருப்பதி வருகிறார். தனி விமானம் மூலம் இலங்கையில் இருந்து மதியம் சென்னை வரும் இலங்கை பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.15 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து, குண்டு துளைக்காத காரில் திருப்பதி வழியாக திருமலை செல்கிறார். பின்னர் திருமலையில் உள்ள கிருஷ்ணா விடுதியில் தங்கு கிறார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு ஏழுமலையானைத் தரிசனம் செய்து, இரவு திருமலையிலேயே தங்குகிறார்.
பின்னர், நாளை காலை 5 மணி யளவில் மீண்டும் குடும்பத்தா ருடன் ஏழுமலையானைத் தரிசனம் செய்கிறார். காலை 8.15 மணிக்கு திருமலையில் இருந்து ரேணிகுண்டா புறப்பட்டு, பின்னர் 9.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னைக்கு செல்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கே வருகையையொட்டி அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கெனவே திருமலைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும் ரணில் விக்ரமசிங்கே தங்கும் விடுதி மற்றும் அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago