அனைத்து சீதோஷ்ண காலங்களிலும் அமர்நாத்துக்கு சென்று வர புதிய சாலை வசதி

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இங்குள்ள கோயிலில் பனிக்காலத்தில் இயற்கையாகவே உருவாகும் சிவலிங்கத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 11 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதையுடன் 22.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை வசதி அமைக்கப்படுகிறது.

கோயிலுக்குச் சென்று வரும் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சீதோஷ்ண காலங்களிலும் அப்பகுதிக்கு மக்கள் எளிதில் சென்று வர இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கணேஷ் மலையில் 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேஷ்நாக் என்ற பெயரில் சுரங்கப்பாதை அமைகிறது. இந்த புதிய சாலையானது சந்தன்வாடி - சங்கம் இடையே 22.3 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைகிறது. மேலும் ஜம்முவிலிருந்து லடாக் செல்லும் பயணிகள் இந்த புதிய சாலையை அனைத்து சீதோஷ்ண காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE