புதுடெல்லி: ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் நாளை மறுதினம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்குநிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா, ஜெர்மனி தயாரிப்புகள்.
மத்திய அரசு ஒப்பந்தம்: இந்த சூழலில் கடந்த 2005-ம்ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2007-ம்ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.
முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி, 2021-ம்ஆண்டில் ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5-வதுநீர்மூழ்கியான ஐஎன்எஸ் வகிர்நாளை மறுதினம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
» ம.பி.யில் கடத்தப்பட்டவர்களை மீட்க நிதி திரட்டும் கிராம மக்கள்
» 6 காங்கிரஸ் அரசுகளை திருடிவிட்டது பாஜக - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதுகுறித்து கடற்படை வட்டா ரங்கள் கூறியதாவது: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்கள், கல்வாரி ரகம் என்றழைக்கப்படுகிறது. கல்வாரி என்ற மலையாள சொல் புலிச்சுறாவை குறிக்கிறது. இதுவரை 4 கல்வாரி ரக நீர்மூழ்கிகள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
டீசல், மின்சாரத்தில் இயங்கும்: ஐந்தாவதாக ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி 23-ம் தேதி கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த நீர்மூழ்கி 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல்- மின்சாரத்தில் இயங்கும். எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கி யில் பொருத்தப்பட்டுள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான் பகுதி, நிலப்பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.
350 மீட்டர் ஆழம் மூழ்கும்: இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கியிருக்க முடியும். இது அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது. கல்வாரி ரகத்தில் இறுதி மற்றும் 6-வது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வக்சிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் கடற்படையில் இணைக்கப்படும். இவ்வாறு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago