அருணாச்சலப் பிரதேசத்தில் அணைகள் கட்டும் பணியை விரைவுபடுத்தும் இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகே திபெத்தின் மேடாக் பகுதியில் பிரம்மபுத்ரா நதி மீது மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சீனா உத்தேசித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அணை தண்ணீரை சீனா தனது பகுதிக்கு மாற்றிவிட்டால் இந்தியப் பகுதிகளில் தண்ணீப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்துள்ளது. அணை தண்ணீரை சீனா திடீரென திறந்துவிட்டால் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் ஆபத்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படவும் சாத்தியமுள்ளது.

இந்நிலையில் சீனாவின் தண்ணீர் யுத்த அபாயம் கருதி, அருணாச்சலப் பிரதேசத்தின் மேல் சபன்சிரி மாவட்டத்தில் 11 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் பிரம்மபுத்ரா நதி மீது மிகப் பெரும் அணை கட்டும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. மேலும் 3 இடங்களில் அணை கட்டும் திட்டத்தை இந்தியா விரைவுபடுத்தியுள்ளது. இதில் கீழ் சபன்சிரி மாவட்டத்தில் 2000 மெகாவாட் மின்னுற்பத்திக்கான அணை கட்டும் திட்டம் இந்த ஆண்டு மத்தியில் முடிவடைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அணைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுடன் வெள்ள அபாயத்தை தடுத்திடவும் தண்ணீர் பற்றாக்குறையை குறைத்திடவும் முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE