மத்திய அரசு மீது முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாஸ்ரீ திட்டம் அலிபூர்தரில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் மம்தா தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “ஓபிசி, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மேற்குவங்க அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும். ஓபிசி, சிறுபான்மையினருக்கு மாநில அரசு கல்வி உதவித் தொகையை வழங்கும். நாங்கள் சமுதாயத்தை ஒன்றிணைக்க விரும்புகிறோம். பாஜக பிரிவினையை ஏற்படுத்தவிரும்புகிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE