தேர்தல் நன்கொடை வசூல் | ரூ.1,917 கோடியுடன் பாஜக முதலிடம் - ரூ.546 கோடியுடன் திரிணமூல் 2-வது இடம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2020-21-ம் நிதியாண்டில் பாஜக ரூ.752 கோடியை நன்கொடையாக பெற்றிருந்தது. இந்த நிலையில் 2021-22-ல் பாஜக பெற்ற நன்கொடை 154 சதவீதம் அதிகரித்து ரூ.1,917 கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.545.7 கோடி நன்கொடை வசூலித்து திரிணமூல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையின் அளவு கடந்த நிதியாண்டில் ரூ.285.7 கோடியிலிருந்து 89 சதவீதம் உயர்ந்து ரூ.541.2 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வலைதளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2021-22 நிதியாண்டில் அனைத்து 8 தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.3,289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளன. இதில், பாஜகவின் பங்கு மட்டும் 58 சதவீத அளவிற்கு உள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் முன்பை விட அதிக அளவில் நன்கொடையை திரட்டியுள்ளது. அதன்படி, 2020-21-ல் ரூ.74.4 கோடியாக மட்டுமே இருந்த அக்கட்சி பெற்ற நன்கொடை 2021-22-ல் 633 சதவீதம் உயர்ந்து ரூ.545.7 கோடியைத் தொட்டுள்ளது.

அதேசமயம், சிபிஎம் கட்சி பெற்ற நன்கொடை 2020-21-ல் ரூ.171 கோடியாக இருந்த நிலையில் 2021-22-ல் ரூ.162.2 கோடியாக குறைந்தது. ஆனால், சிபிஐ பெற்ற நன்கொடை ரூ.2.1 கோடியிலிருந்து ரூ.2.8 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) நன்கொடை வசூல் ரூ.52.4 கோடியிலிருந்து ரூ.43.7 கோடியாக குறைந்துள்ளது. அதிக நன்கொடை பெற்றதைப் போலவே கடந்த 2021-22 நிதியாண்டில் செலவினத்திலும் பாஜகவே முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி, கடந்த நிதியாண்டில் ரூ.854.46 கோடியை செலவு செய்துள்ளது. காங்கிரஸ் ரூ.400 கோடி, திரிணமூல் ரூ.268.3 கோடி, பிஎஸ்பி 85.1 கோடி, சிபிஎம் 83.41 கோடி, சிபிஐ 1.2 கோடி, என்சிபி ரூ.32.2 கோடி செலவிட்டுள்ளன.

திமுக நன்கொடை வசூல்: மாநில கட்சிகளைப் பொறுத்தவரையில் திமுக கடந்த நிதியாண்டில் ரூ.318.7 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ரூ.307.2 கோடி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) ரூ.279.4கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்கட்சி ரூ.93.7 கோடி நன்கொடையை திரட்டியுள்ளதாக தேர்தல் ஆணைய வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்