புதுடெல்லி: முழுவதும் பனிபடர்ந்த நிலையில் மலைகளுக்கு நடுவே ரயில் செல்லும் கண்கவர் போட்டோக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இது எந்த ரயில் நிலையம் என யூகிக்கும்படி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் முழுவதும் பனிபடர்ந்த ரயில் நிலையத்துக்குள் ரயில் செல்லும் காட்சி தெரிகிறது. இது எந்த ரயில் நிலையம் என யூகிக்கும்படி, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். ‘பூமியில் சொர்க்கம்’ என அழைக்கப்படும் இடம் என குறிப்பும் கொடுத்துள்ளார். இதை வைத்து ட்விட்டரில் பலர், ஜம்மு காஷ்மீர் ரயில் நிலையம், பாரமுல்லா பகுதியில் உள்ள அவந்திபுரா ரயில்நிலையம், காஷ்மீரின் காஜிகுண்ட் ரயில் நிலையம், பனிஹல் ரயில் நிலையம் என பதில் அனுப்பியுள்ளனர். ‘சொர்க்கத்தில் ரயில் ஓடுகிறதா?’ என ஒருவர் குறும்புத்தனமாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago