பெங்களூரு: பெங்களூவில் 71 வயதான முதியவரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள விஜயநகரை சேர்ந்த முத்தப்பா (71) நேற்று மாகடி சாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்த சஹில் அஹமது (20) முத்தப்பாவின் கார் மீது வேகமாக மோதியுள்ளார். மேலும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சஹில் அஹமது அங்கிருந்து தப்ப முயன்ற போது முத்தப்பா அவரின் இருசக்கர வாகனத்தை பிடித்து நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் சஹில் அஹமது, தனது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு முத்தப்பா இரு சக்கர வாகனத்தில் கூச்சல் போட்டவாறு இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் சிலர் சஹில் அஹமதுவை விரட்டிச் சென்று பிடித்து, கடுமையாகத் தாக்கினர். மேலும் காயமடைந்த முத்தப்பாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவிந்த்ராஜ் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகன ஓட்டி சஹில் அஹமதுவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் முதியவர் இரு சக்கர வாகனத்தின் பின்னால் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவரும் முத்தப்பா கூறுகையில், ‘‘சஹில் மிகவும் வேகமாக ஓட்டியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. அவர்தவறு செய்திருந்த போதும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. என்னை திட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
அவரை போலீஸில் பிடித்து கொடுக்கவே இரு சக்கர வாகனத்தை பிடித்தேன். நான் வாகனத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காக மிகவும் வேகமாக ஓட்டினார். ஆனாலும் நான் விடவில்லை. இறுதியில் சில வாகன ஓட்டிகள் அவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago