கவரத்தி: லட்சத்தீவு யூனியன் பிரதேச மகக்ளவைத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எம்.பி. முகமது பைசல் உட்பட 32 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வாரம் எம்.பி. முகமது பைசல் உட்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை நடவடிக்கையை எடுத்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 8 உடன் படிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 102 (எல்) (இ) விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago