வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிந்த 3 பேர் கைது

By என்.மகேஷ்குமார்

விசாகப்பட்டினம்: செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் விதத்தில் இந்த வந்தேபாரத் ரயில் பாதை அமைந்துள்ளது. இது நாட்டின் 8-வது வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில், கடந்த புதன்கிழமையன்று சென்னையில் இருந்து சோதனை ஓட்டமாக விசாகப்பட்டினம் வந்தடைந்தது.

அப்போது, விசாகப்பட்டினம் அருகே கஞ்சரபாளையம் எனும் இடத்தில் வரும்போது, அங்கு மதீனாபாக் பகுதியை சேர்ந்த சங்கர் (22), சந்து (21), ராஜ்குமார் (19) ஆகிய மூவரும் மது போதையில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை எரிந்துள்ளனர். இதனால் ரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

நீதிமன்றத்தில் ஆஜர்: உடனே இதுகுறித்து ரயில்வே பைலட் செய்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீஸார் அந்த மூவரையையும் கைது செய்து ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களுக்கு அபராதமும், ஒரு வாரம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE