பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சரும் சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி மீதான சட்ட விரோத சுரங்க வழக்கை சிபிஐ கடந்த8 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து வருகிறது. ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி மற்றும்நிறுவனங்கள் வருமானத்துக்கு அதிகமாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ய அனுமதி கோரி சிபிஐ கடந்த ஆண்டு கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது. பதில் இல்லாததால் சிபிஐ கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி, ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி மற்றும் நிறுவனங்களின் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.64 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய சிபிஐக்கு அனுமதி வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஜனார்த்தன ரெட்டியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அனுமதியை சிபிஐ பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago