மருத்துவ செலவுக்கு அரசு பணத்தை செலவழிக்காத பிரதமர் நரேந்திர மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமராக பதவியேற்ற பின்னர் மருத்துவ செலவுக்கு அரசு பணத்தை பிரதமர் மோடி செலவழிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் பிரஃபுல் சர்தா என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு பிரதமரின் மருத்துவ செலவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் இருந்து இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. பிரதமராக 2014-ல் பதவியேற்றுக் கொண்ட பின்னர் தனக்கு ஏற்படும் மருத்துவ செலவுகள் முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகச் செயலர் பினோத் பிஹாரி சிங், அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியின் தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சை, மருந்துகளுக்கு அரசு பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை. செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE