விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.
இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிக்கன் கறி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,
பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்று அவர் எச்சரித்துள்ளார்.
பரிசோதனை முடிவுகள்:
டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் லிவர், தசை மற்றும் கிட்னி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கூறிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பது தெரியவந்தது.
குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற சிக்கன் கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளரகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், சிக்கன் கறி சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.
எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago