பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை உயிரிழப்பு

By இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து எச்ஆர்பிஆர் லே-அவுட் வரை தூண் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

40 அடி உயர தூண்: இந்நிலையில் நேற்று காலையில் நாகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த 40 அடி உயர தூண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சாலையில் மோட்டார் பைக்கில் பயணித்த லோஹித் (32), அவரது மனைவி தேஜஸ்வினி (28), அவரது மகன் விஹன் (2), மகள் வீனா (2) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் தேஜஸ்வினியும், அவரது மகன் விஹனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த தேஜஸ்வினி மென்பொருள் பொறியாளராக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரதுகணவர் லோஹித்தும் பொறியாளராக பணியாற்றுகிறார். இருவரும் பணிக்கு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்