ஜாம்நகர்: 244 பேருடன் மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு வந்துகொண்டிருந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலால் குஜராத்தின் ஜாம்நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று கோவாவில் தரையிறங்க இருந்தது. 244 பயணிகள் பயணித்த இந்த விமானம் தொடர்பாக கோவா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து விமானம் கோவாவில் தரையிறங்காமல் குஜராத்தின் ஜாம்நகருக்கு திசைதிருப்பப்பட்டது. அதன்படி, 244 பயணிகளும் இரவு 9.49 மணியளவில் குஜராத்தின் ஜாம்நகரில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
ஜாம்நகரில் தரையிறங்கினாலும், விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாக விமான போக்குவரத்துத்துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago