வருமான வரித்துறை சோதனையிலும் பிறந்த நாள் கொண்டாடிய ராமமோகன ராவின் சம்பந்தி

By என்.மகேஷ் குமார்

வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை அதிகாலை முதல் நேற்று வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து சுமார் 25 மணி நேரம் வரை சித்தூரில் உள்ள முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவின் சம்பந்தியான பத்ரி நாராயணாவின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் புதன்கிழமை பத்ரி நாராயணாவின் பிறந்த நாளாகும். வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள் என தெரியாததால், தெலுங்கு தேச கட்சியின் சித்தூர் மாவட்ட துணை தலைவரான இவரின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட கட்சியினரும், இவரது உறவினர்களும் பல ஏற்பாடுகளை செய்திருந்தனர். சித்தூர் நகரம் மட்டுமல்லாது, சித்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் பிறந்த நாள் சுவரொட்டிகள், பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டன. காலை முதல் இரவு வரை கேக் வெட்டி பிறந்த நாளை அமர்க்களப்படுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் வருமான வரித்துறையினர் அதிகாலை 5 மணிக்கே வந்ததால் என்ன செய்வதென தெரியாமல் அமைதியாக இருந்தனர். ஆயினும் வருமான வரி சோதனைக்கிடையிலும், நேற்று முன் தினம் இரவு இவ ரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பத்ரி நாராயணா கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்