வடமேற்கு இந்தியாவை வாட்டும் கடும் குளிர்: பள்ளிகளுக்கு ஜன.15 வரை விடுமுறை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கடும் குளிர் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஎம்டிவ்(IMD) இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி இன்றைய தினம் (ஜன 9) பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் கடும் குளிர் நிலவும் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அண்மைத் தகவல்கள்: 1. கடும் குளிர் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்குமாறு அரசு நேற்றிரவு சுற்றறிக்கை அனுப்பியது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்த அறிவுறுத்தியுள்ளது.

2. ஜார்க்கண்டிலும் மழலையர் வகுப்பு தொடங்கி 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 16ல் மீண்டும் பள்ளிகள் திறக்கும் என்று அறிவித்தது.

3. இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி இன்றைய தினம் (ஜன 9) பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் கடும் குளிர் நிலவும் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது.

4. வடமேற்கு இந்தியாவில் அடர்த்தியானது முதல் மிகவும் அடர்த்தியானது வரையிலான பனி நிலவும் என்றும் இதனால் எதிரே இருப்பவர்களையோ அல்லது வாகனங்களையோ கண்டறிவது கடினமாகும் என்றும் கணித்துள்ளது. 25 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை இந்த பனி மூட்ட அடர்த்தி நிலவலாம் என்று கணித்துள்ளது.

5. இந்நிலையில் இன்றுடன் பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், மேற்கு மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாட்டிவதைக்கும் குளிர் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் வரும் 15 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்கள் தாமதம்; விமான சேவை பாதிப்பு: கடுமையான பனி காரணமாக வடக்கு ரயில்வேயின் 29 ரயில்கள் தாமதமாக பயணிக்கின்றன. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பனி மூட்டம் காரணமாக ஓடுபாதை தெரியாததால் ஷார்ஜா, டெல்லி ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூர் திருப்பிவிடப்பட்டது. மோசமான பனிமூட்டம் காரணமாக 15 விமானங்கள் புறப்பாடு, வருகை தாமதமாகும் என டெல்லி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்