கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் முயற்சியாக ரூபாய் மதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்துவதாக கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய்கள் செல்லாததாக ஆக்கப்பட்டு புதிய 500, 2000 ரூபாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால் போதிய புது நோட்டுகள் புழக்கத்துக்கு வராததால் ஏராளமான மக்கள் வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் கதவுகளிலும் காத்து நிற்கின்றனர். அறிவிப்பு வெளியாகி 40 நாட்களுக்கு மேலாகியும் நிலைமை சீரடையவில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ட்விட்டரில் #ModiPuncturedEconomy (பொருளாதாரத்தில் துளையிட்ட மோடி) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்.
RajiRajan @ModiClub
ரூபாய் நோட்டு நடவடிக்கை கடத்தல் தொழிலில் 20 ட்ரில்லியன் ரூபாய்களை ஒழித்திருக்கிறது.
Praveen kumar @Praveen33849363
நாட்கள் செல்லச்செல்ல தொழில் மோசமாகிக் கொண்டே செல்கிறது. வேலை நேரங்கள் வங்கி வரிசைகளிலேயே கழிகின்றன. #ModiPuncturedEconomy
K.R.Y @kanshityadav1
பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. முறைசாரா தொழில்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சீராக ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டு வருவது போலத் தோன்றுகிறது.
Geet @SGGeet
எதுவுமில்லாத வாழ்க்கை.. ஒரு வாரமாக இருந்து இப்பொது ஒரு மாதமாகி இருக்கிறது. ஊழலுக்கு எதிராக எங்களால் எவ்வளவுதான் போராடமுடியும்?
CA Sanjiv Jha @Casanjiv1
அரசு தினந்தோறும் விதிமுறைகளை மாற்றி வருகிற ரூபாய் நோட்டு நடவடிக்கை, இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மோசமான சம்பவம்.
MANOJ NAIR @manojnair96
நிச்சயம் இந்தியாவில் மாற்றத்தை பார்க்கலாம். 41 நாட்களில் 36 புது விதிமுறைகள்.. வேலையிழந்த மக்கள்.. காசில்லாத ஜனங்கள். #ModiPuncturedEconomy
Vasim Akram @amdvasimakram
மோடி இந்தியாவை பணமில்லாமல் (cashless) ஆக்கவில்லை. மக்களை செருப்புகள் இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.
Dr. Mugdha Singh @IMMugdhaSingh
ஊழல் சாம்ராஜ்யங்களின் வீடுகளைத் தேடாமல், ஏழை மக்களின் கூரைகளைப் பிய்த்து எறிந்திருக்கின்றனர்.
Karnataka Congress @WithCongressKR
ரூபாய் நோட்டு உத்தியின் சிறப்புகளைக் குறித்துப் பேசுபவர்கள் ஏன் வங்கி வரிசைகளில் இறக்கும் மக்களைப் பார்க்க மறுக்கிறார்கள்? #ModiPuncturedEconomy
Pancham @Pancham_Tyagi
முறையான முன்னேற்பாடுகள் இல்லாத அரசின் நோட்டு நடவடிக்கை பணப் பிரச்சனையில் தள்ளியிருக்கிறது. நோட்டுத் தடை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
jatan Acharya @jatanacharya
#ModiPuncturedEconomy. ஆம் இதுவோர் இணைப் பொருளாதாரம். கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் நேர்மையற்ற மக்களுக்கு எதிரான பொருளாதாரம்.
GC Venkatesh @gc_venkatesh
பணமில்லாமல் தொடர்ந்து அவதிப்படுகிறோம். ஓய்வே கொடுக்காமல் அடித்துக்கொண்டே இருந்தால் எங்களால் என்ன செய்ய முடியும்?
Alig Haris Bunker @AligBunker
ரூபாய் நோட்டு நடவடிக்கை என்றால் என்ன? ஒரு ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஏழைகளையும் விவசாயிகளையும் அழிக்கும் ஸ்மார்ட் வழியா?
Ki$$AN @rajeshlathar
மோடி ஜி, இந்தியாவை பணமில்லாப் பொருளாதாரமாக நிஜமாகவே ஆக்கிவிட்டார். ஆம் யாரிடமும் பணமில்லை. #ModiPuncturedEconomy
Anuj Yadav @Anuj_yadav011
45 கோடி தொழிலாளர்கள் தங்களின் தினக்கூலியை நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு யாரால் இழப்பீடு தரமுடியும்?
Mukul Sehgal @MukulSehgal2
ஒவ்வொரு நாளும் மோசம், மிக மோசம், மிக மிக மோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
Anuj Yadav @Anuj_yadav011
நாட்டை மதிப்பதால் அமைதி காத்து நிற்கிறோம். அவ்வளவே. #ModiPuncturedEconomy
sahil thakur @tmanu1432
இதுவரை எவ்வளவு தொகை கறுப்புப் பணத்தை மீட்டுள்ளீர்கள்? இதற்கு மோடி பதில் சொல்லியே தீர வேண்டும். #ModiPuncturedEconomy
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago