கருப்புப் பண விவகாரம்: இந்தியாவுக்கு சுவிஸ் அழைப்பு

கருப்புப் பண விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த சுவிட்சர்லாந் துக்கு வருமாறு இந்திய குழுவி னருக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலை மையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரியில் வரி விதிப்பு நடைமுறைகள் தொடர்பாக சுவிட்சர்லாந்து குழுவினர் டெல்லி வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கருப்புப் பண விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நிதித்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத் திடம் அண்மையில் கூறியபோது, கருப்புப் பணம், வரிவிவகாரங்கள் குறித்து விவாதிக்க பெர்ன் நகருக்கு வருமாறு இந்திய குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

கருப்புப் பணம் தொடர்பான கணக்கு விவரங்களை அளிக்கு மாறு 2011-ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் சுவிட்சர்லாந்திடம் 370 கோரிக்கைகள் முன்வைக்கப்பட் டன. 2012-ம் ஆண்டில் 1499 கோரிக்கைகளும் 2013-ல் 1386 கோரிக்கைகளும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் இந்திய ரூபாய் கள்ள நோட்டுகள்

இதனிடையே சுவிட்சர்லாந்தில் 2013-ம் ஆண்டில் பிடிபட்ட கள்ள நோட்டுகள் குறித்த புள்ளிவிவரத்தை அந்த நாட்டு போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி யூரோ கள்ள நோட்டுகள்- 2394, அமெரிக்க டாலர் கள்ள நோட்டுகள்- 1101 பிடிபட்டுள்ளன. இதற்கு அடுத்து 3-வது இடத்தில் இந்திய ரூபாய் உள்ளது. அங்கு 2013-ம் ஆண்டில் 403 இந்திய ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE