ஜப்பானில் முதல் முறையாக நடைபெறும் விமானப் படை போர் ஒத்திகையில் இந்திய பெண் பைலட் பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

ஜோத்பூர்: ஜப்பானில் ‘வீர் கார்டியன் 2023’ என்ற பெயரில் இந்திய விமானப் படையும் ஜப்பான் விமானப் படையும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒமிடாமா மற்றும் சயாமாவில் உள்ள இருமா விமானப் படை தளம் ஆகிய வான் பகுதிகளில் ஜனவரி 16-ம் தேதி முதல் 26-ம் தேதி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

விமானப் படையில் 3 பெண் போர் பைலட்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவரான அவனி சதுர்வேதி, இரு நாட்டு விமானப் படை போர் பயிற்சியில் பங்கேற்க விரைவில் ஜப்பான் செல்ல இருக்கிறார். இவர் ரஷ்யாவின் சுகோய் ரக எஸ்யூ-30எம்கேஐ என்ற அதிநவீன போர் விமானத்தின் பைலட் டாக இருக்கிறார்.

முதல் முறை..: ஏற்கெனவே, பிரான்ஸ் விமானப்படை உட்பட வெளி நாட்டு விமானப் படைகள் இந்தியாவுக்கு வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த பயிற்சிகளில் இந்திய விமானப் படையின் பெண் பைலட்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், வெளிநாட்டில் நடைபெறும் விமானப் படை போர் பயிற்சியில் இந்திய பெண் பைலட் பங்கேற்பது இதுவே முதல் முறை.

இதுகுறித்து மற்றொரு பெண் பைலட்டான பாவ்னா காந்த் கூறும்போது, ‘‘எஸ்யூ-30எம்கேஐ போர் விமானம் மூலம் வான்வெளியில் இருந்து தரைப் பகுதியையும் தரைப் பகுதியில் இருந்து வான்வெளியிலும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்த முடியும். மேலும், இதை மிகவேகமாகவும், குறைந்த வேகத்திலும் இயக்க முடியும். நீண்ட தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்