ரேவா: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ள சோர்ஹட்டா விமான தளத்திலிருந்து தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டது.
பின்னர் டும்ரி என்ற இடத்தில் உள்ள கோயில் மற்றும் மரத்தின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதுகுறித்து ரேவா மாவட்ட போலீஸ் எஸ்.பி. ரேவா பாசின் கூறும்போது, ‘‘விபத்தில் விமானத்தை இயக்கிய கேப்டன் விஷால் யாதவ் (30) உயிரிழந்தார். பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்
பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானி யின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்தில் சிக்கியதாகத் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago