திட்டங்கள் குறித்து மக்களுடன் ஆலோசிக்க பிஹார் முதல்வர் நிதிஷ் சமாதான யாத்திரை

By செய்திப்பிரிவு

பாட்னா: அரசு திட்டங்கள் குறித்து மக்களுடன் கலந்துரையாட பிஹாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று சமாதான யாத்திரையை தொடங்கினார்.

அரசு திட்டங்கள் குறித்து மக்களுடன் கலந்துரையாட நேற்று முதல் 29-ம் தேதி வரை சமாதான யாத்திரையை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கினார். இதற்காக முதல்வர் நிதிஷ் குமார், மாநில அமைச்சர்கள் விஜய் குமார் சவுத்ரி, சஞ்சய் குமார் ஜா ஆகியோர் மேற்கு சம்பரான் மாவட்டத்தின் வால்மீகி நகருக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கிருந்து நிதிஷ் குமாரின் சமாதான யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த யாத்திரை 18 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிஹார் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோகர், சீதாமர்ஹி ஆகிய மாவட்டங்களின் ஆய்வுக் கூட்டம் சீதாமர்ஹியில் இன்று நடைபெறுகிறது. இது போல் ஜனவரி 29-ம் தேதி வரை தனது யாத்திரையில் பல இடங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்