762 கி.மீ நீளம்... இந்திய ரயில்வேயின் மிக நீண்ட தானியங்கி பிளாக் சிக்னல் பகுதி இது!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அண்மையில் பிரயாக்ராஜ் பிரிவின் சத் நாராயணி-ருந்தி-ஃபைசுல்லாபுர் நிலைய பிரிவில் தானியங்கி பிளாக் சிக்னல் பயன்பாட்டிற்கு வந்ததன் காரணமாக 762 கிலோமீட்டர் நீளம் கொண்ட காசியாபாத் - பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிரிவு முழுவதும் தானியங்கியாக மாறியுள்ளதோடு, இந்திய ரயில்வேயின் மிக நீண்ட தானியங்கி பிளாக் சிக்னல் பகுதியாகத் திகழ்கிறது.

இந்திய ரயில்வேயின் தற்போதைய அதிக போக்குவரத்து கொண்ட வழித்தடங்களில் மேலும் அதிக ரயில்களை இயக்குவதற்கான திறனை அதிகரிப்பதற்கு தானியங்கி பிளாக் சிக்னல் முறை மலிவான தீர்வாக உள்ளது. இந்த முறையை இந்திய ரயில்வே துரிதமாக மேற்கொண்டு வருகிறது. 2022-23 இல் 268 கிலோமீட்டர் வழித்தடங்களில் தானியங்கி பிளாக் சிக்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31 வரையில் சுமார் 3706 கிலோமீட்டர் வழித்தடங்கள் இந்த வசதியைப் பெற்றுள்ளன. தானியங்கி சிக்னல் முறையின் அமலாக்கம், திறனை மேம்படுத்தி, அதிக ரயில்களின் சேவைக்கு வழிவகுக்கும்.

ரயில்களின் இயக்கத்திலும், பாதுகாப்பை மேம்படுத்திடவும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பலனை பெருமளவில் பயன்படுத்துவதற்காக மின்னணு இன்டர்லாக்கிங் முறை செயல்பாட்டில் உள்ளது. 2022-23 இல் 347 ரயில் நிலையங்களில் மின்னணு இன்டர்லாக்கிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31 வரை 2888 நிலையங்களுக்கு இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE