ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய வீட்டின் அருகே ஐஇடி வகை குண்டு வெடித்து குழந்தை உயிரிழந்தது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜவுரி மாவட்டத்தில் டங்ரி கிராமத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த கிராமத்தை முற்றுகையிட்டு போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
நேற்று காலை இந்த சோதனை நடந்த நேரத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து அலறல் சத்தம் எழுந்தது. அந்த வீட்டில் இருந்து படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை உயிரிழந்தது.
காயம் அடைந்தவர்களில் மற்றொருவர் கவலைக்கிட மாக உள்ளார். இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அகற்றினர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago