இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா ஜனவரி 1, 2023 அன்று ஏற்றுக்கொண்டார்.

புனேவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற அவர், கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படையில் இணைந்தார். இவர், வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் முன்னாள் மாணவராவார். 4500 க்கும் அதிகமான மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவத்தை இவர் பெற்றுள்ளார்.

தமது 37 ஆண்டுகள் பணி காலத்தில் ஏராளமான முக்கிய தலைமைப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். போர் விமானப் படையின் தலைமை அதிகாரி, இங்கிலாந்து ராயல் விமானப்படை தளத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பு அதிகாரி உள்ளிட்ட ஏராளமான பொறுப்புகள் இதில் அடங்கும். ‘விஷிஸ்ட் சேவா பதக்கம்' மற்றும் ‘அதி விஷிஸ்ட் சேவா பதக்கங்களை' அவர் பெற்றுள்ளார்.

இந்திய விமானப்படையில் 39 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவை செய்து டிசம்பர் 31, 2022 அன்று ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் எஸ். பிரபாகரனுக்குப் பிறகு, விமானப்படையின் மேற்கு பிரிவின் தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE