புதுடெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஸ்விக்கி உணவு டெலிவரி ஆப் வாயிலாக 3.5 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இரவு 10.35 மணிக்குள் ஸ்விக்கி ஆப்பில் 3.5 லட்சம் பிரியாணிகள், 61 ஆயிரம் பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்விக்கி ட்விட்டரில் நடத்திய வாக்கெடுப்பின்படி ஹைதராபாதி பிரியாணியை 75.4 சதவீதம் பேரும், லக்னோவி பிரியாணியை 14.2 சதவீதம் பேரும் கொல்கத்தா பிரியாணியை 10.4 சதவீதம் பேரும் ஆர்டர் செய்தனர். மொத்தம் 3.5 லட்சம் ஆர்டர்களால் பிரியாணி தான் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் டாப் ஆர்டர் உணவாக மாறியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சனிக்கிழமை மாலை 7.20 மணியளவில் 1.65 லட்சம் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டது. ஹைதராபாத்தின் பாவர்சி பிரியாணி டிசம்பர் 31, 2022ல் மட்டும் 15 டன் பிரியாணியை தயாரித்திருந்ததும் தெரியவந்தது.
டொமினோஸ் இந்தியாவில் 61,287 பீட்சா டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வாயிலாக 1.76 பாக்கெட் சிப்ஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இந்தியா முழுவதும் நேற்றிரவு 9.18 மணியளவில் 12,344 பேர் கிச்சடி ஆர்டர் செய்துள்ளனர் என்ற சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago