ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நேற்று கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 186 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 56 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 159 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளோம். மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்பான பணியைச் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்குவதற்கான சரியான பாதையில் போலீஸாரும், இதர பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருக்கினறனர்.
146 பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களை இந்த ஆண்டில் அழித்துள்ளோம். இந்த வகை குழுக்கள் ஒவ்வொன்றிலும் 4 முதல் 5 தீவிரவாதிகள் இருப்பர். இந்த ஆண்டில் சுமார் 100 இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதக் குழுக்களில் இணைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இது மிகக் குறைந்த அளவாகும். இதன்மூலம் இப்பகுதியில் தீவிரவாதம் மெல்ல மெல்ல வேரறுக்கப்பட்டு வருவது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago