புதுடெல்லி: ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டம் தொடர்பாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
2014-ம் ஆண்டு இபிஎஃப்ஓ கொண்டுவந்த ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 4-ம் தேதி அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இபிஎஃப்ஓ, ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை ரூ.6,500 - லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தியது. மேலும், ஊழியர்கள் அவர்களது சம்பளத்தில் 8.33 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பாக வழங்கலாம் என்று அறிவித்தது. இந்தத் திருத்தப்பட்ட திட்டத்தைத் தேர்ந்தெடுக்காமல் விட்ட ஊழியர்களுக்கு கூடுதலாக நான்கு மாதம் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் 2022 நவம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவின்படி இபிஎஃப்ஓ தனது அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago