சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணைப்படி ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் மார்ச் 27-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. இதற்கான அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. அதில், தற்போது ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் மார்ச் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜேஇஇ மெயின் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வருவதை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ கூறியுள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காலை 10.30 மணிக்குத் தொடங்கி 1.30 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் ஜனவரி 2-ம் தேதி தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்