புதுடெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்யின் பிரதமர் முகமாக ராகுல் காந்தி இருப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், "2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ராகுல் காந்தி எதிர்க்கட்சியின் முகமாக மட்டுமல்லாது பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார். உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருமே இத்தகைய நீண்ட பாத யாத்திரையை மேற்கொண்டதில்லை. காந்தி குடும்பத்தைத் தவிர வேறு எந்த ஒரு குடும்பமும் இத்தனை பெரிய தியாகங்களை நாட்டுக்காக செய்ததில்லை. ராகுல் காந்தி அதிகார அரசியல் செய்யவில்லை. மாறாக அவர் மக்களுக்கான அரசியலை செய்கிறார்" என்றார்.
ம.பி. தேர்தலில் வெற்றி பெறுவோம்: மத்தியப் பிரதேச மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் "தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்படும். தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரஸில் நிர்வாக ரீதியிலான சில மாற்றங்கள் செய்யப்படும்" என்று கமல்நாத் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago