புதுடெல்லி: ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர், கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்
துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியா வருவோர் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பாதிப்பு இல்லை (நெகட்டிவ்) என்ற
சான்றிதழை இந்தியா வரும் பயணிகள் ஏர் சுவிதா இணையதளத்தில், புறப்படுவதற்கு முன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில் கரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா பரவலை தடுக்க மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago