அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின்தாயார் ஹீராபென், குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசிக்கிறார். 100 வயதாகும் அவருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல்நிலைசீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. தகவல் அறிந்து மேத்தா மருத்துவமனைக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் மோடி, தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்த டாக்டர்களிடம் தாயாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் மருத்துவமனையில் இருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்கு முன்பு கடந்த மாதம் குஜராத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வந்த பிரதமர் மோடி, தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றுவிட்டுச் சென்றார்.
குணம்பெற ராகுல் வாழ்த்து: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவர்ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
» ஜம்மு என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதி உயிரிழப்பு
» நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை - டெல்லி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு
இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘ஒரு தாய்க்கும் அவருடைய மகனுக்கும் இடையிலான பிணைப்பு உண் மையில் விலைமதிப்பற்றது. இதுபோன்ற கடினமான நேரத்தில் உங்களுக்கு எனது அன்பையும் ஆதரவையும் வழங்குகிறேன். உங்கள் தாயார் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் ட்விட்டர் பதிவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘‘பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை யடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற விழைகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago