காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின விழா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மக்களிடையே பாஜக பிரி வினையை உருவாக்கி, நாட்டில் வேலைவாய்ப்பின்மையை நீடிக்க வைக்கிறது. இந்தியா என்ற எண்ணத்தின் மீதே தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வெறுப்புணர்வை ஒவ்வொரு நாளும் பாஜக அதிகப்படுத்துகிறது. பணவீக்கம் மற்றம் வேலைவாய்ப்பின்மை ஆகியவை மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது. ஆனால், இது பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போது நடைபெறும் தேசிய ஒற்றுமை யாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சி மிகப் பெரியளவில் மக்களை சென்றடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நாடுவளர்ச்சி பெற்றது. இந்தியா வளர்ச்சி பெற்றது மட்டும் அல்லாமல் வலுவான ஜனநாயகமாகவும் மாறியது. அனைவருக்கும் சமஉரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்ய அரசியல்சாசனத்தின் மீது அனைவரையும் முழு நம்பிக்கை கொள்ள வைத்தது காங்கிரஸ். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்