ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. அதிகபட்சமாக பயோலாஜிகல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளன.
பயோலாஜிகல் இ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் விக்ரம் பரத்கர் கூறுகையில், “நாங்கள் 30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களைத் தயாரித்தோம். இவற்றில் 10 கோடி டோஸ்களை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு வழங்கினோம். மீதம் 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. ஆர்டர் கிடைத்ததும் உடனே அனுப்பும் வகையில் அவை தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார்.
கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. கரோனா தடுப்பூசிக்கான தேவை குறைந்த நிலையில், இந்நிறுவனம் இவ்வாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தயாரிப்பை குறைத்தது. எனினும், இந்நிறுவனம் வசம் 5 கோடி டோஸ்கள் கையிருப்பாக உள்ளன. இவை 2023 முற்பகுதியில் காலாவதியாகின்றன. இதனால் நிறுவனத்துக்கு ரூ.220 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் கைவசம் உள்ள கரோனா தடுப்பூசிகளை விரைவில் விநியோகம் செய்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago