அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு விரைந்து வந்து தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு வந்து தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவரிடம், ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் விளக்கிக் கூறினர்.
» மகாராஷ்டிராவுக்கு ஒரு அங்குலம் நிலம்கூட விட்டுத்தர மாட்டோம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர்
» Rewind 2022 | அரசியல் முகம்: நரேந்திர மோடி - பாஜகவின் ‘அடையாள’ நம்பிக்கை!
பிரதமர் மோடியின் சகோதாரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார், கர்நாடகாவின் மைசூரு அருகே நேற்று விபத்துக்குள்ளானது. இதில், பிரஹலாத் மோடி உள்பட அவரது குடும்பத்தினர் சிறிய அளவில் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த மறுநாளில், தற்போது ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைவார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அம்மா - மகன் இடையேயான அன்பு விலைமதிப்பில்லாதது. கடினமான இந்த தருணத்தில் பிரதமர் மோடிக்கு எனது அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயார் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago