திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.
2012ல் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரில் உண்மையில்லை என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இடதுசாரிகள் தலைமையிலான அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கடந்த 2021ம் ஆண்டு பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. விசாரணை அறிக்கை திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
முதல்வராக இருந்த உம்மன் சாண்டியால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த பெண், தான் குறிப்பிடும் தினத்தன்று முதல்வரின் அலுவலக இல்லத்திற்குச் சென்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ள சிபிஐ, அந்த பெண்ணின் குற்றச்சாட்டு புனையப்பட்டது என்றம் கூறியுள்ளது. சிபிஐ-யின் இந்த அறிக்கை மூலம் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago