முக்கிய 7 நகரங்களில் 3.65 லட்சம் வீடு விற்பனை: அனராக் ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்னை, கொல்கத்தா, டெல்லி-என்சிஆர், மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலம் (எம்எம்ஆர்), பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் நடப்பாண்டில் 3.65 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச விற்பனை அளவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2014-ம் ஆண்டில்தான் இந்த முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனையானது 3.43 லட்சம் என்ற சாதனை அளவை தொட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அந்த சாதனை விற்பனை அளவு முறியடிக்கப்பட்டுள்ளது. கடன் வட்டி அதிகரிப்புக்கிடையிலும் இது சாத்தியமாகியுள்ளது. கடந்த 2021-ல் முக்கிய 7 நகரங்களில் குடியிருப்புகள் விற்பனையானது 2,36,500-ஆக இருந்தது.

கரோனா பேரிடருக்குப் பிறகு தேவை அதிகரிப்பு மற்றும் உள்ளீட்டு செலவினங்கள் உயர்வு ஆகியவற்றின் காரணமாக குடியிருப்புகளின் விலை 4 முதல் 7 சதவீதம் வரை அதிகரித் துள்ளது.

நடப்பாண்டில் அதிகபட்சமாக எம்எம்ஆர்-ல் 1,09,733 குடியிருப்புகள் விற்பனையாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து டெல்லி-என்சிஆர் பகுதியில் வீடு விற்பனை 40,053-லிருந்து 59 சதவீதம் அதிகரித்து 63,712-ஆனது.

அதேபோன்று, புனேயில் நடப்பு ஆண்டில் வீடுகள் விற்பனையானது 35,975-லிருந்து 59 சதவீதம் உயர்ந்து 57,146-ஆகவும், பெங்களூருவில் விற்பனை 33,084-லிருந்து 50 சதவீதம் அதிகரித்து 49,478-ஆகவும், ஹைதராபாதில் 25,406-லிருந்து 87 சதவீதம் உயர்ந்து 47,487-ஆகவும் இருந்தன.

சென்னையைப் பொருத்தவரையில் குடியிருப்புகளின் விற்பனை16,097-ஆக இருந்தது. இது, முந்தைய 2021-ல் விற்பனையான 15,525 வீடு களுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகம் என அனராக் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்